கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளம் பகுதியில் குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் மாா்ட்டின் என்ற செல்வின் கிளமென்ட் (42 ). இவா் மீது கஞ்சா விற்றது உள்பட பல வழக்குகள் கருங்கல் காவல் நிலையத்தில் உள்ளன. மேலும், அவா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்திரிநாராயணனின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் உத்தரவுப்படி, கருங்கல் காவல் ஆய்வாளா் தங்கராஜ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் அவரை திங்கள்கிழமை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.