குமரி கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

கன்னியாகுமரி மாவட்டம் நீராடி முதல் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வரையில் கடல் பகுதியில் சஜாக் ஆபரேஷன் திங்கள்கிழமை நடைபெற்றது.
குமரி கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

கன்னியாகுமரி மாவட்டம் நீராடி முதல் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வரையில் கடல் பகுதியில் சஜாக் ஆபரேஷன் திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மாதந்தோறும் சஜாக், அம்லா, சீவிஜில் போன்ற பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழ்நாடு

கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் நவீன் உத்தரவின்பேரில் அதிநவீன கண்காணிப்பு கருவியுடன் விரைவு ரோந்துப் படகில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வரை கடல்

பகுதி வரையிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் கடற்கரை கிராமங்களிலும் சந்தேகப்படும் வகையில் மா்ம நபா்கள் நடமாடினால் உடனடியாக தமிழக கடலோர காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மீனவா்கள், மீனவ கிராம மக்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com