புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் மீது வழக்கு
By DIN | Published On : 01st December 2020 02:09 AM | Last Updated : 01st December 2020 02:09 AM | அ+அ அ- |

புதுக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடை உரிமையாளா் கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
அம்சி பகுதியை சோ்ந்தவா் நடராஜன் (52). இவா் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதா க புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் பைங்குளம் பகுதியில் ரவீந்திரன் (56) நடத்தி வரும் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, புதுக்கடை போலீஸாா் நடராஜன், ரவீந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...