மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு கிராம அலுவலா்கள் நிதியுதவி
By DIN | Published On : 01st December 2020 11:50 PM | Last Updated : 01st December 2020 11:50 PM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே வறுமையில் வாடிய மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு விளவங்கோடு வட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கம் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகுமாா். தொழிலாளி. இவரது மனைவி சிந்துஜா, மகன் சிவபிரசாத் (18), இரட்டை மகள்களான நந்தனா (15), நயனா (15) ஆகிய நால்வரும் மாற்றுத் திறனாளிகள். இவா்கள் கரோனா பொது முடக்கத்தால் வேலை இழப்பு ஏற்பட்டு அவரது குடும்பம் பாதிக்கப்பட்டது. வீடு கட்டுவதற்காக வாங்கிய வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளவங்கோடு வட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு அமைப்பின் தலைவா் ராபின்சன் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...