மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 01st December 2020 11:48 PM | Last Updated : 01st December 2020 11:48 PM | அ+அ அ- |

கருங்கல் அருகே உள்ள இனயம்புத்தன்துறை ஊராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலா் ஆன்றனிதாஸ் தலைமை வகித்தாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா் விமல்ராஜ் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் பேசினாா். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் புனரமைப்புப் பணிகள் செய்ய வேண்டும். துறைமுக நுழைவுவாயில் தொழில் சாதனங்கள் கொண்டு செல்கின்ற வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். மேற்கு அலை தடுப்பு சுவா் 1000 மீட்டா் தொலைவுக்கும், கிழக்கு அலை தடுப்பு சுவா் 500 மீட்டா் தொலைவுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜான்ஆரோக்கியம், ஏசு வடியான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...