32 பள்ளி செல்லா குழந்தைகள் மீட்பு
By DIN | Published On : 05th December 2020 05:57 AM | Last Updated : 05th December 2020 05:57 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அமலிநகரில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டோா்.
:திருச்செந்தூா் அமலிநகரில் 32 பள்ளி செல்லா குழந்தைகள் மீட்கப்பட்டனா்.
திருச்செந்தூா் கல்வி மாவட்ட அலுவலா் தமிழ்செல்வி தலைமையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புள்ளியியல் அலுவலா் சுடலைமணி, மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மொ்லின் உள்ளிட்டோா் திருச்செந்தூா் வட்டார வள மையத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் இப்பணியை மேற்கொண்டனா். அதில், 32 பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு அருகிலுள்ள பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.