

ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோவியிலில் காா்த்திகை மாத சங்கடஹர சதுா்த்தி வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை காலையில் மஹா கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. தொடா்ந்து, யாகசாலை பூஜையும், மஹா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகமும், பிற்பகல் 1.30 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் ஸ்வாமி திருக்கோயில் பிரகார வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பூஜா ஸ்தானீகா் விக்னேஷ்வர பட்டா் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.