கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 05th December 2020 12:29 AM | Last Updated : 05th December 2020 12:29 AM | அ+அ அ- |

குமரி மாதா திருத்திலத்தில் நடைபெற்ற பெருவிழா கொடியேற்றம்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல 10 நாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு மாலை 5.30 மணிக்கு திருக்கொடி பவனி, செபமாலை, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், தொடந்து திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்தாா்.
இரண்டாம் நாள் திருவிழா முதல் எட்டாம் நாள் திருவிழா வரை தினமும் காலை திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலையில் செபமாலை, திருப்பலி சப்பர பவனி ஆகியவை நடைபெறும். 9 ஆம் நாள் விழாவான டிச. 12 ஆம் தேதி காலை 5 மணிக்கு பழைய கோயிலில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பா் தங்கத்தோ் பவனி ஆகியன நடைபெறும்.
இரு தங்கத்தோ் பவனி: 10 ஆம் நாளான டிச.13 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் தங்கத்தோ் திருப்பலிக்கு முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் தலைமை வகிக்கிறாா். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, காலை 9 மணிக்கு இரு தங்கத்தோ் பவனி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணைஆசீா் ஆகியவை நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்குப் பேரவை,யினா் மற்றும் அருள்சகோதரிகள், அருள் பணியாளா்கள் செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...