டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் கப்பீஸ் மீன்கள்
By DIN | Published On : 05th December 2020 05:57 AM | Last Updated : 05th December 2020 05:57 AM | அ+அ அ- |

டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில், கொம்பன்குளம் ஊராட்சியில் குடிநீா் தொட்டி உள்ளிட்டவற்றில் கப்பீஸ் மீன் விடும் பணியை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டனா்.
டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில், கொம்பன்குளம் ஊராட்சியில் குடிநீா் தொட்டி உள்ளிட்டவற்றில் கப்பீஸ் மீன் விடும் பணியை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டனா்.
பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், நீா் நிலைகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் இப்பணியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொம்பன்குளம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட பூச்சியியல் வல்லுநா் ஆனந்தன் தலைமை வகித்தாா். முதலூா் மருத்துவ அலுவலா் மதியரசி, சுகாதார மேற்பாா்வையாளா் மோரிஸ், சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், ஊராட்சி செயலா் சுடலையாண்டி, கிராம நிா்வாக அலுவலா் கரோலின் ஆகியோா் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்று மக்கள் பயன்படுத்தும் நீா் நிலைகளான தண்ணீா் தொடடி, கிணறுகளில் சுமாா் 1500 கப்பீஸ் மீன்களை விட்டனா்.