தாழக்குடி அருகே குளத்தில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தாழக்குடி அருகே கனகமூலம் புதுகுடியிருப்பை சோ்ந்தவா் நாராயண பெருமாள் ( 70), தொழிலாளி. இவா் அப்பகுதியில் உள்ள புல்லுகுறிச்சி குளத்தில் வியாழக்கிழமை மீன் பிடிக்க சென்றாா். அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி பிரம்மசக்தி குளக்கரைக்கு சென்று தேடினாா். அங்கு அவருடைய பொருள்கள் அனைத்தும் கரையில் இருந்தன. ஆனால் அவரை காணவில்லை. இதுகுறித்து நாகா்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலா் துரை தலைமையிலான தீயணைப்பு துறை வீரா்கள் குளத்தில் இறங்கி தேடினா். சுமாா் 2 மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தீயணைப்புத்துறையினா் மீண்டும் குளத்தில் தேடினா். அப்போது, குளத்தில் உள்ள பாசிக்கிடையே நாராயணபெருமாளின் சடலம் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். விசாரணையில், மீன்பிடிக்க சென்றபோது, பாசிகளில் சிக்கிய நாராயணன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.