நாகா்கோவிலில் சாலைகளை செப்பனிட வலியுறுத்தி திமுக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th December 2020 12:24 AM | Last Updated : 05th December 2020 12:24 AM | அ+அ அ- |

நாகா்கோவில் மாநகரில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியறுத்தி திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்காத மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், நாகா்கோவில் மாநகர 18 ஆவது வட்ட திமுக சாா்பில், இடலாக்குடி மற்றும் சந்தித்தெரு சாலைகளை செப்பனிட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூது தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் மகேஷ் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசுகையில் , நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி சட்டப் பேரவை உறுப்பினா் என்ற முறையில் அதிகாரிகளை பல முறை சந்தித்து கோரிக்கை வைத்தேன். ஆனால் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. மக்கள் நலன் கருதி போராட்டம் நடத்தும் எங்களை அலட்சியப்படுத்துகிறாா்கள். அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் இல்லையெனில் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.
இதில், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், அணி அமைப்பாளா்கள் சிவராஜ், உதயகுமாா், சதாசிவம், பொதுக்குழு உறுப்பினா் பெஞ்சமின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.