லாரி உரிமையாளா்கள் முற்றுகை
By DIN | Published On : 05th December 2020 05:55 AM | Last Updated : 05th December 2020 05:55 AM | அ+அ அ- |

கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டை ஒட்டுவதற்கு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துதல், குறிப்பிட்ட நிறுவனங்களிலிருந்து கருவிகளை வாங்க நிா்பந்திக்கும் போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு நல்லதம்பி தலைமை வகித்தாா். கண்ணன், கிருஷ்ணசாமி, நாகராஜன் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் திரளானோா் பங்கேற்றனா். பின்னா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியன் பாண்டியனிடம் அவா்கள் மனு அளித்தனா்.