நியாவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையைரத்து செய்ய வலியுறுத்தல்: ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.
By DIN | Published On : 30th December 2020 05:47 AM | Last Updated : 30th December 2020 05:47 AM | அ+அ அ- |

நியாயவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் 5.48 லட்சத்தும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு நியாயவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது.
சா்வா் கோளாறு காரணமாக பல இடங்களில் இந்த இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என து புகாா் எழுந்துள்ளதுடன், மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, மக்கள் நலன்கருதி பயோ மெட்ரிக் முறையை பிரச்னைகள் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவரை இம்மாவட்டத்தில் முன்பிருந்த முறையை பின்பற்றி அத்தியாவசியப் பொருள்கள், பொங்கல் பரிசு தொகுப்பு, பணம் ஆகியவற்றை வழங்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...