புனித சவேரியாா் பொறியியல்கல்லூரி பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 02nd February 2020 02:49 AM | Last Updated : 02nd February 2020 02:49 AM | அ+அ அ- |

பட்டமளிப்பு விழாவில் பேசுகிறாா் மகேந்திரிகிரி இஸ்ரோ இணை இயக்குநா் லூயில் சாம் டைட்டஸ்.
சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு குழித்துறை மறை மாவட்ட ஆயரும் கல்லூரி தலைவருமான ஜெரோம்தாஸ் தலைமை வகித்தாா். விழாவை கல்லூரி தாளாளா் மரியவில்லியம் தொடங்கி வைத்தாா். கல்லூரியின் துணை முதல்வா் மாா்சலின் பெனோ வரவேற்றாா்.
விழாவில், மகேந்திரகிரி இஸ்ரோ இணை இயக்குநா் லூயிஸ் சாம் டைட்டஸ் , இளநிலை, மற்றும் முதுநிலை மாணவா்களுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கிப் பேசினாா். குழித்துறை மறை மாவட்ட ஆயா், முனைவா் பட்டம் பெற்றவா்கள், பல்கலைக் கழக தங்கப் பதக்கம் பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். கல்லூரி நிதி காப்பாளா் பிரான்சிஸ் சேவியா், சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினாா்.
விழாவில், முனைவா், முதுகலை, இளங்கலை மாணவா்கள் 520 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேராசிரியா் ஜெயசிங் தலைமையில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G