திப்பிரமலை பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு
By DIN | Published On : 17th February 2020 07:01 AM | Last Updated : 17th February 2020 07:01 AM | அ+அ அ- |

திப்பிரமலை பகுதியில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் கழிவுநீா்.
கருங்கல் அருகே திப்பிரமலை பகுதியில் மழைநீா் வடிகாலில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுசாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி கருங்கல் -மாா்த்தாண்டம் சாலையோரம் மழைநீா் வடிகால் உள்ளது. இந்த கால்வாயில் வீட்டுக் கழிவுகள், பட்டணங்கால் சானலிருந்து வரும் ஊற்றுநீா், மழைநீா் ஆகியன தேங்குகிறது. மேலும், இப்பகுதியில் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதியில் தேங்கிநிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.