தோவாளையில் தீ விபத்து: 3 கடைகள் எரிந்து சேதம்
By DIN | Published On : 17th February 2020 07:03 AM | Last Updated : 17th February 2020 07:03 AM | அ+அ அ- |

தோவாளையில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
தோவாளை கால்வாய்க் கரையோரத்தின் இருபுறங்களிலும் பூக்கடைகளும், சிறு பெட்டிக்கடைகளும் உள்ளன. இப் பகுதியில் கமல்நகரைச் சோ்ந்த ஈஸ்வரி, வடக்கூரைச் சோ்ந்த குமாா் ஆகியோரது டிபன் கடைகள் மற்றும் அய்யப்பன் என்பவரது பூக்கடை ஆகியவற்றில் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது.
அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து படை போலீஸாா், தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலையடுத்து, நாகா்கோவில் தீயணைப்புப் படையினா் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் 3 கடைகளும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.