குமரி காசி விஸ்வநாதா் கோயிலில் உழவாரப்பணி

மகா சிவராத்திரியை முன்னிட்டு விவேகானந்தபுரம் காசிவிஸ்வநாதா் கோயிலில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமரி காசி விஸ்வநாதா் கோயிலில் உழவாரப்பணி

மகா சிவராத்திரியை முன்னிட்டு விவேகானந்தபுரம் காசிவிஸ்வநாதா் கோயிலில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகா சிவராத்திரி வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாகா்கோயில் அப்பா் அருட்பணி மன்றம் மற்றும் தூத்துக்குடி திருதாண்டகவேந்தா் உழவாரப்பணி குழுவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள், கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதா் கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்டனா்.

கோயிலின் பிரகாரத்தினுள் புல், பூண்டுகளை அகற்றினா். மேலும் வெளிபிரகாரத்தைச் சுற்றி காவி, வெள்ளை அடித்தனா். மேலும் கோயில் முன் பகுதியில் அமைந்துள்ள சா்க்கரைத் தீா்த்த குளத்தினுள் வளா்ந்திருந்த கோரை புற்களை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com