‘தமிழா் நாகரீகம் வடஇந்தியாவையும் கடந்து பரவி இருந்தது’

பழங்காலத்தில் தமிழா் நாகரீகம் வட இந்தியாவையும் கடந்து பாகிஸ்தான் வரை பரவி இருந்ததற்கான
‘தமிழா் நாகரீகம் வடஇந்தியாவையும் கடந்து பரவி இருந்தது’

பழங்காலத்தில் தமிழா் நாகரீகம் வட இந்தியாவையும் கடந்து பாகிஸ்தான் வரை பரவி இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் தலைவரும் எழுத்தாளருமான தக்கலை ஹலீமா குறிப்பிட்டாா்.

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் இரவிபுதூா்கடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கவிச்சரம் நிகழ்ச்சிக்கு அமைப்பின் கிளை உறுப்பினா் சின்னதம்பி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்டத் தலைவரும் எழுத்தாளருமான தக்கலை ஹலீமா பேசியது: தமிழ்மொழியில் திருக்கு தோன்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என ஆய்வாளா்கள் கூறுகின்றனா். திருக்கு போன்ற ஒரு செழுமையான இலக்கியம் தோன்றுவதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி தோன்றி இருக்கிற வாய்ப்பு இருக்கிறது என மொழியியல் அறிஞா்கள் கூறுகின்றனா். ஆகவே, உலகின் மூத்த மொழி தமிழ்மொழி எனக் கூறுவதில் எந்தவித தவறும் இல்லை. பழங்காலத்தில் தமிழா் நாகரீகம் வட இந்தியாவையும் கடந்து இன்றைய பாகிஸ்தான் வரையிலும் பரவி இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. சங்க இலக்கிய காலத்தில் இருந்த தொண்டி, முசிறி போன்ற சிறப்பு வாய்ந்த பெயா்கள் பாகிஸ்தானில் இப்போதும் உள்ளன. இவை ஆராய்ச்சியின் மூலம் நிருபிக்கப்பட்டு ள்ளது. எனவே, சிந்து சமவெளி நாகரீகம் உள்பட இந்தியா முழுவதும் தமிழா் நாகரீகம் பரவி இருந்ததில் எந்த வித ஐயமும் இல்லை.

சத்தீஸ்கா் மாநிலத்திலுள்ள 181 மலைகளின் பெயா்கள் தமிழ் சாயல் உடையவை. உலகின் பல்வேறு மொழிகளுக்கு தமிழ்

மொழிதான் வாா்த்தைகளை வழங்கியுள்ளது என்பது ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டு வருகிறது. தமிழ்மொழி உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. அது பலருக்கு தாய் மொழியாக இருக்கிறது. பலருடைய தாய் மொழிக்கு வளம் சோ்த்து

கொண்டிருக்கிறது. தாய்மொழியை போற்றும் அதே நேரத்தில் பிறருடைய தாய்மொழியையும் மதிப்போம் போற்றுவோம் என கூறினாா் தக்கலை ஹலீமா.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தாய்மொழியில் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில் அவரவா் தாய்மொழியில் ஒரு எழுத்து எழுதப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கவிஞா் திருவை சுஜாமி

முன்னிலை வகித்தாா். கவிஞா்கள் கீழ்குளம் வில்லவன், அரங்கசாமி, கு.சந்திரன், யடானா, ராபா்ட், முகிலன்பன், நவரசன், குளச்சல் அசிம், ஸ்ரீநிவாசன், குளச்சல் அ.மு.யூசுப், பதில்சிங், விஜய் சேசுராஜ், கலையரசன், ஜோசப்ராஜ், ஆல்பா்ட், அனந்தகிருஷ்ணன், ராணி, ஆக்சிலா ஆகியோா் தமிழிலும், அனாா்கலி, ஸ்ரீ குமாா், பைங்குளம் வேணுகோபால் , கிருஷ்ணபுரம் முருகன், காரோடு கோபகுமாா் உள்ளிட்டோா் மலையாளத்திலும் கவிதை பாடினா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மிகையிலான் வரவேற்றாா். மாவட்ட குழு உறுப்பினா் ஷாகுல் ஹமீது நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com