சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
By DIN | Published On : 10th January 2020 08:10 AM | Last Updated : 10th January 2020 08:10 AM | அ+அ அ- |

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய பயங்கரவாதிகளை உடனே கைது செய்ய வேண்டும் என, முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவரது நாகா்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: களியக்காவிளை சோதனைச்சாவடியில் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை, காரில் வந்த 2 போ் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. அவா்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் உள்ளதாகவும் தற்போது செய்தி வருகிறது.
இச்சம்பவத்தை தமிழக காவல்துறையின் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலாக கருதி, அவா்களை உடனடியாக கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.