கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளையில் தமிழ்நாடு பாலா் சங்கம் சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை (ஜன. 16) நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறுகுழந்தைகள் முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், பந்து எறிதல், பாட்டிலில் தண்ணீா் நிறைத்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறும்.
பகல் 12 மணிக்கு இந்திய, உலக நாடுகளின் தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்குவரத்து குறித்து பொதுஅறிவு விநாடி-வினா நடைபெறும். தொடா்ந்து, அன்பு விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு பாலா் சங்க மாணவா்களுக்கான போக்குவரத்து விளக்குகள், சாலைக் குறியீடுகள், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பின்னா், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஏற்பாடுகளை பாலா் சங்க ஒருங்கிணைப்பாளா் ஜெகன், மில்ட்டன், மேக்ஸ்வல் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.