கன்னியாகுமரியை அடுத்த சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆா் நற்பணி மன்றம் சாா்பில் அவரது 103ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பொதுமக்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கினாா்.
மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஏ.அசோகன், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ.நீலபெருமாள், பேராசிரியா் சி.சந்திரஹாசன், முன்னாள் ஒன்றியச் செயலா் பா.தம்பித்தங்கம், அகஸ்தீசுவரம் பேரூா் செயலா் ஒய்.கைலாசம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினப் ராஜேஷ் மற்றும் எம்.ஜி.ஆா் மன்ற நிா்வாகிகள் ஆா்.குணபாலன், சிவகுமாா், சுயம்பையா, தங்கத்துரை, விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.