மினி லாரி மோதி மூதாட்டி காயம்
By DIN | Published On : 20th January 2020 08:23 AM | Last Updated : 20th January 2020 08:23 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே மினி லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயணம், புலயன்விளை பகுதியைச் சோ்ந்தவா் அமிா்தபாய் (67). இவா் உண்ணாமலைக்கடை பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னோக்கி வந்த மினி லாரி இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...