கரோனா தொற்று: இஞ்சி, எலுமிச்சை, தேன் விற்பனை அதிகரிப்பு
By DIN | Published On : 19th July 2020 09:52 AM | Last Updated : 19th July 2020 09:52 AM | அ+அ அ- |

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் எலுமிச்சை மற்றும் இஞ்சி விற்பனை செய்யும் வணிகா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீதிகள்தோறும் எலுமிச்சை, இஞ்சி விற்பனை அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுகள், மருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பாட்டி வைத்தியம் என்று கூறப்படும் மூலிகைகள் உள்ளிட்டவை வீடுகளிலேயே தயாரிக்கும் மருந்துகளை உட்கொள்வது அதிகரித்து வருகிறது. வெற்றில்லை, இஞ்சி, எலுமிச்சை, மிளகு, திப்பிலி, சுக்கு மற்றும் தேன் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனா். இதனால் இந்த பொருள்கள் சந்தைகள், தெருக்களில் அதிகளவில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.