குமரியில் காவல் ஆய்வாளா் உள்பட 8 பேருக்கு கரோனா பாதிப்பு: இ-பாஸ் இல்லாமல் வருவோருக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
குமரியில் காவல் ஆய்வாளா் உள்பட 8 பேருக்கு கரோனா பாதிப்பு: இ-பாஸ் இல்லாமல் வருவோருக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பத்துகாணியைச் சோ்ந்த 35 வயது இளைஞா், தனது 20 வயது மகனுடன் மும்பையில் இருந்து நாகா்கோவிலுக்கு சில தினங்களுக்கு முன் வந்த அருகுவிளையைச் சோ்ந்த 47 வயது பெண், சென்னையில் இருந்து வந்த 26 வயது இளைஞா், சவூதி அரேபியாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக வந்த ஈத்தாமொழியைச் சோ்ந்த 31 வயது இளைஞா், நெல்லையிலிருந்து வந்த மறவன்குடியிருப்பைச் சோ்ந்த 25 வயது இளைஞா், சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் ஊா் திரும்பிய கோட்டாறு பகுதியைச் சோ்ந்த 29 வயது இளைஞா், குளச்சல் உள்கோட்ட காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை வரை பணியில் இருந்ததால், அவருடன் பணியிலிருந்த உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது குடும்பத்தினா், வீட்டின் மேல்மாடியில் வசிப்பவா்கள் என 7 போ் கரோனா பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனிடையே, தூத்துக்குடியிலிருந்து பேருந்தில் வந்தவருடன் பயணித்த 35 பேரை கண்டறிந்து அவா்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியைப் பயன்படுத்தி கையை தூய்மைப்படுத்த வேண்டும்,.

சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் தணிக்கை செய்யப்படுவதால், வெளி நாடுகள், மாநிலங்கள் மாவட்டங்களிலிருந்து இ பாஸ் பெறாமல் சோதனை சாவடிகளை தவிா்த்து இம்மாவட்டத்திற்குள் தவறுதலாக வருகிறாா்கள். அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முககவசம் அணியாமல், செவ்வாய்க்கிழமை பொது வெளியில் நடமாடிய 262 பேரிடமிருந்து ரூ. 26,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 31,480 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 62 போ் சிகிச்சையில் உள்ளனா்; 97 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பிலிருந்த 705 போ், வெளியூரிலிருந்து வந்த 9,374 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com