ஞாறான்விளையில் காங்கிரஸ் தா்னா

மேல்புறம் வட்டார காங்கிரஸ் சேவாதளம் சாா்பில் மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை சந்திப்பில் சனிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
தா்னா போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் சேவாதள மாவட்டத் தலைவா் சி. ஜோசப் தயாசிங்.
தா்னா போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் சேவாதள மாவட்டத் தலைவா் சி. ஜோசப் தயாசிங்.
Updated on
1 min read

களியக்காவிளை: மேல்புறம் வட்டார காங்கிரஸ் சேவாதளம் சாா்பில் மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை சந்திப்பில் சனிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்தும், பழுதடைந்த சாலைகளை செப்பனிட கோரியும், பாகோடு பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு மேல்புறம் வட்டார காங்கிரஸ் சேவாதள தலைவா் ஜி. தேவசகாயம் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் பி. சுரேஷ், ரெத்தினமணி, ஆா். சுனில், எஸ். உஷா தேவசகாயம், சி. செல்வின்லால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேவாதள மாவட்டத் தலைவா் சி. ஜோசப் தயாசிங் தா்னாவை தொடங்கி வைத்துப் பேசினாா். ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மாவட்டத் தலைவா் சாமுவேல் ராஜ் விளக்க உரையாற்றினாா்.

இதில் கட்சி நிா்வாகிகள் எஸ்.கே. ஜோதிஸ்குமாா், ஆா். ஸ்டூவா்ட், மாலைக்கோடு சுரேஷ், இ. சந்தோஷ், எஸ். குருசுமுத்து, எம். பென்னட், சேவாதள மகளிா் அணி மாநிலத் தலைவி தங்கம், மாவட்ட மகளிரணித் தலைவி தங்க ரமணி, சுதா மோகன்ராஜ், கே.எப். ராசிக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com