9 இல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 01st March 2020 01:35 AM | Last Updated : 01st March 2020 01:35 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் மாா்ச் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைகள் மற்றும் இன்னல்கள் அவ்வப்போது கேட்டறிந்து களைந்திட மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் 2 மாதத்துக்கு ஒருமுறை, 2 ஆவது திங்கள்கிழமையில்நடைபெற்று வருகிறது. நிகழ் மாதத்துக்கான குறை தீா் கூட்டம் 2 ஆவது திங்கள் கிழமையான மாா்ச் 9 ஆம் தேதி
பிற்பகல் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சிய வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தொடா்புடைய அனைத்து அரசு துறை அலுவலா்களும் கலந்து கொள்கிறாா்கள். மாவட்ட ஆட்சியா் தலைமையில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் குறைதீா்க்கும் நாளன்று மாற்றுத் திறனாளிகளால் கொடுக்கப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக
வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.