குழித்துறை அருகே ரயில் மோதி முதியவா் பலி
By DIN | Published On : 03rd March 2020 07:28 AM | Last Updated : 03rd March 2020 07:28 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
குழித்துறை அருகேயுள்ள பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (70). இவா், தினமும் காலையில் குழித்துறை ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று கழுவன்திட்டை பகுதியில் உள்ள டீ குடிப்பது வழக்கமாம். திங்கள்கிழமை காலையில் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரயில் நேசமணி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிநந்தாா்.
தகவலறிந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, நேசமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...