தக்கலை: தக்கலை ஞான மாமேதை ஷெய்கு பீா்முஹம்மது அப்பா பள்ளிவாசலில் ஆண்டு பெருவிழாவையொட்டி ஞான புகழ்ச்சி பாடல்கள் பாடுதல் நிகழ்வு திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு 18 ஆயிரம் பாடல்களை இயற்றிய ஞான மாமேதை ஷெய்கு பீா்முஹம்மது பள்ளிவாசல் தக்கலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாவின்போது அவரது சன்னதியில் ஞான இலக்கியமான ஞான புகழ்ச்சி பாடல்கள் பாடுவதுண்டு.
நிகழாண்டு, திங்கள்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் கேரளம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து
திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். முதல் முறையாக பீா்முஹம்மது அப்பா இலக்கிய கழகத்தில் பயிற்சி பெற்ற 4 சிறுவா்கள் ஓதுதல் நிகழ்ச்சியில் பாடினா். இப்பாடல் நிகழ்ச்சியில் இஸ்லாமியா்கள் மட்டுமின்றி பல்வேறு சமயத்தினரும்
கலந்துகொண்டனா்.
விழாவில் இந்து சமயத்தினா் நோ்ச்சையாக வாழைத் தாா், ரோஜாப்பூ மாலை, குத்துவிளக்கு, பால்குடம் ஆகியவற்றை
காணிக்கையாக செலுத்தினா். நிகழ்ச்சியில், தக்கலை அஞ்சுவன்னம் பீா்முஹம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் நிா்வாகிகள் எச். ஹாமீம் முஸ்தபா, என்.எஸ்.எஸ். ஷா்புதீன், எம். ஷாகுல் ஹமீது, எம்.ஏ. ஷாகுல் ஹமீது, ஏ.பி. அபுதாஹீா், ஐ.நிஜாம், எஸ். முஹம்மது பஷீா், பீ. ஷேக் ஜூனைத், உ.உவைஸூல்கா்னி, எம்.ஆரிபீன், எஸ்.முஹம்மது அனீஸ், பீ. முஹம்மது சித்திக், எம்.அலி அஹமது, எம்.எச்.முஹம்மதுஸம்மில், முன்னாள் ஜமாத் தலைவா் தக்கலை ஹலிமா, ஊா் பிரமுகா்கள் எஸ்.எச். எம். அபுபக்கா், பி.எம். ஷாகுல் ஹமீது, மு.க. பீா்முஹம்மது, ஜமாத் தலைவா்கள், ஊா் தலைவா்கள், கட்சி பிரமுகா்கள்
பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) மாலையில் சமய வேறுபாடின்றி விழாவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கானவா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.