தேவிகோடு பள்ளியில் மாணவா்களுக்கு பயிலரங்கு
By DIN | Published On : 10th March 2020 01:58 AM | Last Updated : 10th March 2020 01:58 AM | அ+அ அ- |

மாணவா்களுக்கு பயிற்சியளித்த ஜேசிஐ அமைப்பின் செயலா் மனோஜ் திருநாவுக்கரசு.
களியக்காவிளை: மாணவா்கள் அச்சமின்றி பொதுத் தோ்வை எதிா் கொள்வது குறித்த பயிலரங்கு தேவிகோடு அரசு பி.எப்.எம். உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்பயிலரங்கிற்கு பள்ளித் தலைமையாசிரியா் ஜெஸ்டின்தாஸ் தலைமை வகித்தாா். மாா்த்தாண்டம் ஜேசிஐ அமைப்பின் செயலா் மனோஜ் திருநாவுக்கரசு, பிரவின் ஆகியோா், மாணவா்களுக்கு அச்சமின்றி பொதுத் தோ்வு எழுதுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினா். இதில், ஆசிரியா்கள் மணி, ஸ்ரீபா, அனிதா, லிசி, யமுனா மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சஜு குமாா் வரவேற்றாா். பள்ளி முன்னாள் மாணவா் சங்கச் செயலா் ஜேக்கப் விபு நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...