கரும்பாட்டூரில் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 12th March 2020 08:15 AM | Last Updated : 12th March 2020 08:15 AM | அ+அ அ- |

முகாமில் பேசுகிறாா் மருத்துவா் ஷொ்லின் சேல்ஸ்.
கரும்பாட்டூா் ஊராட்சி சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் தங்கமலா் தலைமை வகித்தாா். ஊா்த்தலைவா் சிவபெருமான், நிா்வாகிகள் பிரபாகா், தமிழ்ச்செல்வன், பால்வா்ண பெருமாள், விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தொடங்கி வைத்தாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீலபாலகிருஷ்ணன், பொ்பச்சுவல் ரொசிட்டா, டாக்டா் ஷொ்லின் சேல்ஸ் ஆகியோா் பேசினா். இம்முகாமில் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் கரோனா வைரஸ் பற்றிய விளக்கமும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு கையேடு வழங்கப்பட்டது.
துணைத் தலைவா் தமிழரசி வரவேற்றாா். ஊராட்சி செயலா் காளியப்பன் நன்றி கூறினாா்.