500 மீன் விற்பனையாளா்களுக்கு அலுமினிய பாத்திரங்கள்
By DIN | Published On : 12th March 2020 08:13 AM | Last Updated : 12th March 2020 08:13 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 500 மீன் விற்பனையாளா்களுக்கு அலுமினிய பாத்திரம் வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட கடல் மீனவ மகளிா் மீன் விற்பனையாளா்களுக்கு சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் கடல் மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு 2019-20 ஆம் ஆண்டுக்கான தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில், மீன்விற்பனை செய்ய மூடியுடன் கூடிய அலுமினியப் பாத்திரம் 500 மீனவ பயனாளிகளுக்கு வழங்கிட ரூ.2.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பள்ளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த 2 பேருக்கு அலுமினியப் பாத்திரங்களை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மண்டல மீன்துறை துணை இயக்குநா் த.இளம்வழுதி மற்றும் நாகா்கோவில், மீன்துறை உதவி இயக்குநா் ப. மோகன்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G