சோதனைச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 22nd March 2020 07:59 AM | Last Updated : 22nd March 2020 07:59 AM | அ+அ அ- |

4852kkv21col_2103chn_50_6
களியக்காவிளை: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காக்கவிளை சோதனைச் சாவடியில் ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் பயணிகளிடம் வெப்பமானி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே, கொல்லங்கோடு அருகிலுள்ள காக்கவிளை சோதனைச் சாவடி, கடையாலுமூடு பேரூராட்சியில் உள்ள நெட்டா சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஷரண்யா அறி, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.