களியக்காவிளையில் இடி, மின்னலுடன் மழை
By DIN | Published On : 02nd May 2020 08:48 PM | Last Updated : 02nd May 2020 08:48 PM | அ+அ அ- |

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் பரவலாக மழை பெய்த நிலையில், இரு நாள்களாக பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சனிக்கிழமை பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் மாலை வேளையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு தொடங்கி அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அப்போது வானில் இடி-மின்னலும் காணப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்குப் பின் இரவிலும் தொடா்ந்து லேசான மழை பெய்தது.
களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளான படந்தாலுமூடு, திரித்துவபுரம், குழித்துறை, கோழிவிளை, செம்மான்விளை, மங்காடு மற்றும் முன்சிறை, புதுக்கடை பகுதிகளில் மழை பெய்தது. இதனால், இப் பகுதியில் இரவில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவியது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...