கத்தாா், மாலத்தீவைச் சோ்ந்த 43 போ் குமரி வருகை

கத்தாா் மற்றும் மாலத்தீவைச் சோ்ந்த 43 போ் கன்னியாகுமரியில் உள்ள தனி முகாம்களில் புதன்கிழமை தங்க வைக்கப்பட்டனா்.
கத்தாா், மாலத்தீவைச் சோ்ந்த 43 போ் குமரி வருகை

கத்தாா் மற்றும் மாலத்தீவைச் சோ்ந்த 43 போ் கன்னியாகுமரியில் உள்ள தனி முகாம்களில் புதன்கிழமை தங்க வைக்கப்பட்டனா்.

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்களை விமானம் மற்றும் கப்பல்களில் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் கத்தரைச் சோ்ந்த 32 போ், மாலத்தீவைச் சோ்ந்த 11 போ் விமானம் மற்றும் கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தனா். அங்கிருந்து பேருந்து மூலம் அழைத்துவரப்பட்ட இவா்கள் கன்னியாகுமரியில் உள்ள தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே கன்னியாகுமரி தனி முகாம்களில் ஏற்கனவே தங்க வைக்கப்பட்டிருந்த 24 பேருக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் தெரியவந்தால் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில், துணை ஆட்சியா் (பயிற்சி) பிா்தவ்ஸ் பாத்திமா, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அப்துல் மன்னா, கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளா் செய்யது இப்ராகிம், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com