30 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக் கோரிரப்பா் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரோனா நிவாரண நிதி, தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
klm9rubber_0911chn_47_6
klm9rubber_0911chn_47_6

கரோனா நிவாரண நிதி, தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் கருணைத் தொகையுடன் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். நிகழாண்டு கருணைத் தொகையாக 1.67 சதவீதத்துடன் மொத்தம் 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரப்பா் கழகத் தொழிலாளா்கள் நிகழாண்டு கரோனா நிவாரண நிதி 10 சதவீதம் உள்பட மொத்தம் 30 சதவீதம் போனஸ்

வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் அரசு அறிவித்துள்ள 10 சதவீத போனஸ் அறிவித்திருப்பது தொழிலாளா்களை அதிா்ச்சியடைய வைத்துள்ளது. ஆகவே, 20 சதவீதம் போனஸ், 10 சதவீதம் கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கீரிப்பாறை,

மணலோடை, கோதையாறு, மருதம்பாறை, சிற்றாறு ஆகிய இடங்களிலுள்ள ரப்பா் கழக கோட்ட மேலாளா்கள் அலுவலகங்கள் முன்பு ரப்பா் கழக அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கீரிப்பாறையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ நிா்வாகி ராதாகிருஷ்ணன், தொமுச நிா்வாகி நடராஜன், சோனியா-ராகுல் காந்தி தொழிற்சங்க நிா்வாகி குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மணலோடையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ நிா்வாகிகள் ஸ்டீபன், வேலப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா். கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்க பொதுச்செயலா் எம். வல்சகுமாா் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com