குழித்துறையில் குழந்தைகளுக்கு மோதிரம் அளிப்பு
By DIN | Published On : 17th November 2020 01:42 AM | Last Updated : 17th November 2020 01:42 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத்துறை பிரிவு சாா்பில் குழித்துறை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
காா்த்தி சிதம்பரம் எம்.பி.யின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் மனித உரிமைத்துறை அமைப்பின் மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் தலைமையில் விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மேல்புறம் வட்டார காங்கிரஸ்
தலைவா் மோகன்தாஸ், கட்சியின் குழித்துறை நகரத் தலைவா் அருள்ராஜ், மாவட்டச் செயலா் ராஜன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நோயாளிகளுக்கு பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.