கஞ்சா விற்ற 3 போ் கைது
By DIN | Published On : 23rd November 2020 01:15 AM | Last Updated : 23rd November 2020 01:15 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் சிறுவா்களுக்கு கஞ்சா விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் ஜெயின் இந்துக் கல்லூரி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த உதயராஜ் (21), சதீஷ்(19), விக்னேஷ் (19) என்பதும், அவா்களை சோதனை செய்த போது சிறு சிறு பொட்டலமாக 250 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து அப்பகுதி சிறுவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.