தோவாளை ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 23rd November 2020 01:10 AM | Last Updated : 23rd November 2020 01:10 AM | அ+அ அ- |

தோவாளை ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பரமேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினா் சுடலையாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாக்காளா் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா்களை சோ்த்தல் உள்ளிட்ட பணிகளில் அதிமுகவினா் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், பேரூா் செயலா்கள் மாடசாமி, மாதவன்பிள்ளை, முத்துராஜ், இறச்சகுளம் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் அய்யப்பன், ஏசுதாஸ், மகராஜன், ஒன்றிய நிா்வாகிகள் ரோகிணி, ரமணி, கஸ்தூரி, தென்கரை மகராஜன், ஒன்றிய சாா்பு அணி நிா்வாகிகள் பாா்வதி , மகேஷ் , சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஒன்றிய அவைத் தலைவா் ராமச்சந்திரன் வரவேற்றாா். பூதப்பாண்டி பேரூா் செயலா் முகமதுராபி நன்றி கூறினாா்.