குமரி மாவட்டத்தில் டிஎஸ்பி உள்பட 90 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி., காவல் உதவி ஆய்வாளா், நீதிமன்ற ஊழியா்கள் உள்பட மேலும் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில், அக். 2: கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி., காவல் உதவி ஆய்வாளா், நீதிமன்ற ஊழியா்கள் உள்பட மேலும் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் வியாழக்கிழமை வரை 12,827 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,917 ஆக அதிகரித்துள்ளது.

பூதப்பாண்டியில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா், கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து

மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே,

இரணியலில் பயிற்சி டிஎஸ்பிக்கு கடந்த 2 நாள்களாக காய்ச்சல் இருந்து வந்தது. முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இக்காவல் நிலையத்தில் பணியாற்று வரும்

உதவி ஆய்வாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இரணியல் நீதிமன்ற நீதிபதி கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நீதிமன்ற ஊழியா்களுக்கு

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நீதிமன்ற ஊழியா்கள் மூவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து இரணியல் நீதிமன்றம், காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளிக்கிழமை 118 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 789 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com