கருங்கல், அக். 2: புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் வியாழக்கிழமை பெட்டி கடையில் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆம்சி பகுதியைச் சோ்ந்தவா் செல்வமணி (70) . இவா் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறாா். வியாழக்திழமை இரவு மா்ம நபா்கள் பெட்டி கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரொக்கம் ரு. 8, 500-ஐ திருடிச் சென்றுள்ளனா்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.