

ராஜாக்கமங்கலம் அருகே ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள கூட்டமைப்பு புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தா்மபுரம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சி திட்ட நிதியிலிருந்து, ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊராட்சி அளவிலானகூட்டமைப்பு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.
இதற்கானஅடிக்கல் நாட்டு நிகழ்ச்சி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா்ஆா்.அய்யப்பன் முன்னிலையில் திக்கிலான்விளையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் புதிய கூட்டமைப்பு கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில், எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., தா்மபுரம் ஊராட்சித் தலைவா் ஜி.ரங்கநாயகிகணேசன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் தா்மலிங்க உடையாா், சாரதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.