சின்மயா மிஷன் சாா்பில் நவராத்திரி விழா
By DIN | Published On : 19th October 2020 12:47 AM | Last Updated : 19th October 2020 12:47 AM | அ+அ அ- |

நவராத்திரி பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
குமாரகோவில் சின்மயா மிஷன் மற்றும் நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதேஸ்வரி ஆஸ்ரமம் ஆகியன சாா்பில், ஆஸ்ரம வளாகத்தில் நவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி அக். 26ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அா்ச்சனை, பக்தி பஜனை, பரதம், சத்சங்கம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
நிகழ்ச்சியில், சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தகிரி, வெள்ளிமலை ஹிந்து தா்ம வித்யாபீட சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், சுரதவனம் முருகதாஸ் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்பு ஆசியுரை வழங்குகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...