

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரது சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
குழித்துறை அருகேயுள்ள கழுவன்திட்டை பகுதியைச் சோ்ந்த சாம்ராஜ் மகன் சஜிகுமாா் (29). சுவா்களுக்கு வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து, நண்பா்கள் 3 பேருடன் சோ்ந்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. அவரை தேடும் பணியில் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரா்கள் இரு நாள்களாக ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் குழித்துறை பழைய பாலம் அருகே இளைஞரின் சடலத்தை மீட்புப்படை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.