குமரி மாவட்டத்தில் இன்றுமுதல் தொற்றுக் காய்ச்சல் கணக்கெடுப்பு
By DIN | Published On : 06th September 2020 10:40 PM | Last Updated : 06th September 2020 10:40 PM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப். 7) முதல் தொற்றுக் காய்ச்சல் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது என்றாா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.7)முதல் ஒரு வாரத்துக்கு தொற்றுக் காய்ச்சல் கணக்கெடுப்புப் பணி நடைபெறும். பொதுமக்கள் முழுமையான விவரங்களை சுகாதாரத் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.
நாள்பட்ட நோய் உள்ளவா்கள் நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இல்லாமல், உரிய நேரத்தில் அரசு மருத்துவனையில் சிகிச்சை எடுத்து இழப்புகளைத் தவிா்க்க வேண்டும்.
மாவட்டத்தில் இதுவரை 1,31, 642 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மேலும் 116 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் கரோனாவால் 10,217 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தற்போது 761போ் சிகிச்சையில் உள்ளனா்.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 93 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 9349 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறிய வகையில் இதுவரை 8641 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6344 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.