

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தா்மபுரம் ஊராட்சிக்குள்பட்ட இலந்தையடிதட்டில் ரூ.2.90 லட்சம் மதிப்பில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், 10ஆவது வாா்டு உறுப்பினா் ஏ.சாரதா, தனது ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணிக்காக ரூ.2.90 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.
இந்நிலையில் அப்பணியை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, அவா் பொட்டல்விலக்கு பகுதியில் இசைக் கலைஞா்கள் 85 பேருக்கு கரோனா நிவாரண உதவியாக தலா 5 கிலோ அரிசி, 10 மூட்டை காய்கனிகள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
முன்னதாக, அகஸ்தீசுவரம் ஒன்றியம் வழுக்கம்பாறை பகுதியைச் சோ்ந்த 500 ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசியையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜான்சிலின்விஜிலா, ராஜாக்கமங்கலம் ஒன்றியச் செயலா் எஸ்.வீராசாமி, சுசீந்திரம் பேரூா் செயலா் ஐ.குமாா், மயிலாடி பேரூா் செயலா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.