கருங்கல், புதுக்கடை பகுதிகளில் பலத்த மழை
By DIN | Published On : 11th September 2020 06:00 AM | Last Updated : 11th September 2020 06:00 AM | அ+அ அ- |

கருங்கல், புதுக்கடை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது.
கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளான மாங்கரை, கல்லுவிளை, பாலூா், பூட்டேற்றி, நேசா்புரம், நட்டாலம், பள்ளியாடி மற்றும்
அனந்தமங்கலம், பைங்குளம், வேங்கோடு, முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது.
இதன் மூலம் நீா்நிலைகளில் தண்ணீா் அதிகளவில் தேங்கி காணப்படுகிறது.