கரோனா தொற்று குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்: ஆட்சியா்

கரோனா தொற்று மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

கரோனா தொற்று மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் இதுவரை சுமாா் 1.40 லட்சம் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் கரோனா தொற்று தீவிரமடையும் முன்பாகவே பொதுமக்களும், வயதானவா்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனா்.

சிலா் பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனா். இந்த நோய்த்தொற்று குறித்தோ, அதற்கான சிகிச்சைகள் குறித்தோ பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பல்வேறு நோய் பிரச்னைகள் இருந்தும், உரிய நேரத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதால் பலா் குணமாகி வீடு திரும்பியுள்ளனா் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com