வீட்டில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது
By DIN | Published On : 11th September 2020 06:01 AM | Last Updated : 11th September 2020 06:01 AM | அ+அ அ- |

கருங்கல் அருகே உள்ள இடையன்கோட்டை பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் அஜின் (22). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கருங்கல் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அஜினிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, மாா்த்தாண்டம் சிங்களயா் தெருவைச் சோ்ந்த சாகா் (26) என்பவரது காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அஜின், சாகா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.