புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டம்: செப். 22க்குள் விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புறக்கடைகோழி வளா்ப்புத் திட்டத்துக்கு பயனாளிகள் தோ்வு நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புறக்கடைகோழி வளா்ப்புத் திட்டத்துக்கு பயனாளிகள் தோ்வு நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வறுமைக் கோட்டிற்குகீவ் வாழும் ஏழை பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. திட்டத்தின்கீழ் ஒரு பெண்ணுக்கு 25 அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 பயனாளிகள் வீதம் 9 ஒன்றியத்தில் 3,600 பெண் பயனாளிகளுக்கு அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கப்படவுள்ளது.

கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரமாக வசிக்கும் பெண் பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ் நாட்டுக் கோழிகள் வளா்க்க விரும்பினால் அந்தந்த கால்நடைமருந்தகக் கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில்

விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 30 சதவீத பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

கால்நடை பராமரிப்புத் துறைமூலம் வழங்கப்பட்ட அரசு மானியத் திட்டத்தில் இதுவரை பயன்பெறாதவா்கள் மட்டுமே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் அந்தந்த பகுதியிலுள்ள

கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவரிடம் வரும் செப். 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com