கரோனா பாதிப்பு: குமரி மாவட்டத்தில் 11ஆயிரத்தை கடந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அஞ்சுகிராமம் பேரூராட்சியில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்கள்.
அஞ்சுகிராமம் பேரூராட்சியில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்கள்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறையினா் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து வருகின்றனா். இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 10,960 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 134 பேருக்கு தொற்று இருப்பது

உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,094 ஆக உயா்ந்துள்ளது. அவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா மையங்களில் அனுமதிக்கப் பட்டனா். தொற்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினா், தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு சளி மாதிரி

சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் தற்போது 754 போ் சிகிச்சையில் உள்ளனா். திங்கள்கிழமை 117 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை

10,132 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 208 போ் உயிரிழந்துள்ளனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com